சிராய்ப்பு காயங்களுக்கு:
- இவலம் பிசினை பொடி செய்து காயங்கள் மீது தடவி வர குணமாகும்
எல்லா வித புரை புண்களும் தீர:
- உதிரமா இலையை அரைத்து பற்றிடலாம்
வெட்டுக்காயம் குணமாக:
- இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயங்கள் மீது பூசலாம்
வெட்டுக்காயம் சீக்கிரம் ஆற:
- புங்கன் இலையை அரைத்து வெட்டுக்காயங்கள் மீது பூசி வரலாம்
அடிபட்ட காயம் சீழ் பிடிக்காமல் ஆற:
- மிளகாய் வத்தல் அரைத்து கட்டவும்
காயம் குணமாக:
- அரிவாள்மனை பூண்டு இலை, குப்பை மேனி இலை, பூண்டு, மிளகு சேர்த்து அரைத்து கட்டவும்
வெட்டுக்காய புண் செப்டிக் ஆகாமல் தடுக்க:
- குப்பை மேனி இலையை அரைத்து பூச செப்டிக் ஆவதை தடுக்கலாம்
ரணங்கள் ஆற:
- பெருங்காயத்துடன் வேப்பிலையை மைய அரைத்து காயத்தின் மீது தடவி வர ரணங்கள் குணமாகும்
சாதாரண புண்கள், காயங்களுக்கு:
- கடுக்காய் பொடி சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து போடலாம்
நாள்பட்ட புண் ஆற:
- புளிய மரத்தின் சொற சொறத்த பட்டையை பொடி செய்து பாலுடன் கலந்து தடவி வர புண் ஆறும்
புரையோடியபுண் காயங்கள் ஆற: அத்தி
பால் தடவலாம்
புண்:
- சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கால்களில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் உடனடியாக கவனிக்க வேண்டும்
No comments:
Post a Comment