அக்கூல் பகுதி:-
- தினமும் குறைந்தது இரு முறையாவது தண்ணீர் விட்டு நன்கு கழுவி ஈரம் இல்லாத துணியை கொண்டு துடைக்க வேண்டும்
சீலைபேன் ஒழிய:-
- நாய் துளசி இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம்
படர் தாமரை தீர:-
- சந்தனக்கட்டையை எலுமிச்சை சாற்றில் அரைத்து தடவ வேண்டும்
படர் தாமரை குணமாக:
- பூவரசு காயின் சாற்றை தடவவும்.
நமைச்சல் சிரங்கு தீர:-
- துளசி இலையை அரைத்து பூசி குளிக்க வேண்டும்
தேமல் சரியாக:-
- கமலா ஆரஞ்சு தொலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளிக்க வேண்டும்
சரும நோய்:-
- மஞ்சள் வேப்பில்லை அரைத்து பூச குணமாகும்
தேமல் படை குணமாக:-
- நாயுருவி இலை சாரை தடவி வர குணமாகும்
செரியாமை, தோல் நோய்கள் தீர:-
- நனாரி வேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம்
உடல் நாற்றம் நீங்க:-
- பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளிக்கலாம்
தோள்வலி நீங்க:-
- மாதுளம், அன்னாச்சி, திராட்சை, எலுமிச்சை நெல்லிக்காய் சாப்பிடலாம்
தேமல் குணமாக:-
- வெள்ளை பூடை, வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தோலில் தேய்த்து குளிக்கலாம்.
சொறி சிரங்கு குணமாக:-
- அருகம்புல் தையலம் தேய்த்து குளிக்கலாம்
வேர் குரு:-
- சாதம் வடித்த கஞ்சியை தடவி கொஞ்சம் நேரம் கழித்து குளிக்கலாம்
புண் சிரங்கு தீர:-
- நுனா இலையை அரைத்து பற்று போட புண் சிரங்கு தீரும்
கரும்படை:-
- ஜாதிக்காய் அரைத்து தடவலாம்
சிரட்டை தைலம்:-
- தோல் வியாதிக்கு அருமையான மருந்து
உடல் வீக்கம் தோல் நோய் குணமாக:-
- தக்காளிக்காய் சாப்பிடலாம்
சொறி சிரங்கு படை தீர:-
- நிலாவரை கஷாயம் தடவி வர ஆறும்
கரப்பான் கிரந்தி குணமாக:-
- ஆடாதொடை இலை, சங்கன் இலை கஷாயம் செய்து சாப்பிடலாம்
No comments:
Post a Comment