காய்ச்சல் தீர:-
- வேப்பிலையை வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கவும். நிம்மதியான தூக்கமும் வரும்
மலேரியா காய்ச்சல் குணமாக:
- மிளகு சீரகம் சேர்த்து சாப்பிட்டு வரவும்
பித்த காய்ச்சல் தீர:
- சீதேவி செங்கழுநீர் சமூலமாக்குடிநீர் செய்து சாப்பிடலாம்
எப்படிப்பட்ட காய்ச்சலும் தீர:
- கோரைக்கிழங்கு கஷாயம் செய்து குடித்தால் நல்லது
எலும்பு காய்ச்சல் தீர:
- நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை மாலை சாப்பிட்டு வரவும்
காய்ச்சல் சரியாக:
- நார்த்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்கவும்
சுரம் நீங்க:
- வெங்காய சாறு அரை கப் காலை மாலை சாப்பிட்டு வரவும்
அம்மை காய்ச்சல் தீர:
- அகத்தி மரப்பட்டை கஷாயம் குடிக்க அம்மை காய்ச்சல் தீரும்
சளி காய்ச்சல் தீர:
- ஓமவல்லி இல்லை காம்பு கஷாயம் செய்து குடித்து வரவும்
சளி காய்ச்சல் குணமாக:
- ஆடாதோடா இல்லை கஷாயம் தேன் கலந்து குடிக்க சரியாகும்
தாகசுரம் நீங்க:
- கோரை கிழங்கு, சந்தனம்,வெட்டி வேர், பற்படாகம், பிரமட்டை கஷாயம் குடிக்கலாம்
சன்னி இழுப்பு:
- சங்கிலி வேப்பிலை சமாளவு கஷாயம் தேன் கலந்து குடிக்க சரியாகும்
வாத காய்ச்சல் குணமாக:
- அவரி இலை சீரகம் மிளகு, சேர்த்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்கவும்
இருமல் சளி காய்ச்சல் தீர:
- ஓமவல்லி இல்லை காம்பு கசாயம் செய்து குடிக்கலாம்
இடைவிடாத காய்ச்சல் தீர:
- பீச்சங்கு இலை சாறு 10 மிலி சாப்பிட்டு வரலாம்
தாகம் மிகுந்த சுரம் தீர:
- கனவாழை சமூலதுடன் மிளகு சீரகம் கஷாயம் செய்து குடிக்கலாம்
சீதள காய்ச்சல் குணமாக:
- தூதுவளை,கண்டாத்ரி பற்படாகம் விஷ்ணுகிரந்தி கஷாயம் காய்ச்சி 10 மிலி மூன்று வேலை குடிக்கலாம்
நச்சு காய்ச்சல் போக:
- பற்படாகம் நிலவேம்பு சுக்கு சீரகம் அதிமதுரம் கஷாயம் குடிக்கலாம்
டைபாய்டு தீர:
- புன்னை பூவை உலர்த்தி பொடி ஒரு சிட்டிகை காலை மாலை கொடுக்கலாம்
குளிர் காய்ச்சல் தீர:
- முருங்கைபட்டை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி கொடுக்கலாம்
பித்த சுரம் தீர:
- விமாள இலை கஷாயம் குடிக்கலாம்
No comments:
Post a Comment