Monday, March 10, 2014

உடம்புக்கு உள்ளே இருக்கும் புண்கள் ஆற

உள்ரணம் தீர:
  • கொட்டை கரந்தை உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வரலாம்

உள்ரணம் குணமாக:
  • கொத்தமல்லி உணவில் அடிக்கடி பயன்படுத்த வர விரைவில் குணமாகும் 

அக உறுப்புகள் சீராக: 
  • சீரக நீரை குடிநீராக பயன்படுத்த வேண்டும்

அக உறுப்புகள் பலமடைய:
  • கிராம்பு பொடியை அரைகிராம் தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வரலாம்

உள்ரணம்:
  • தென்னம் பூவை மென்று தின்று வரவும்

உள் உறுப்புகளை வன்ன்மைபடுத்த :
  • கொன்றை பூ பொடி செய்து சாப்பிட்டு வர உள்ளுறுப்புகளை வன்ன்மைபடுத்தலாம்

கழுத்து வலி குணமாக:
  • அமுக்கிராங் கிழங்கை தெளிந்த சுண்ணாம்பு நீரில் குழைத்து கொதிக்க வைத்து கழுத்தில் பற்று போடலாம்

சன்னி பிடரி வலி, வாத நோய் கட்டுப்பட:
  • வேப்பன்னையில் தலைமுழுகி வர குணமாகும்

பொன்னுக்கு வீங்கி குணமாக:
  • கன்னம், கழுத்தில் ஏற்படும் வீக்க நோய் வசம்பு பலா மஞ்சள் சேர்த்து அரைத்து போடவும்

கண்டமாலை வீக்கம் கரைய:
  • கொள்ளுக்காய் வேளை செடி வேர், மஞ்சள் சேர்த்து பாலில் அரைத்து பூசி வரவும்

நரம் இசிவு சிரங்கு, கண்டமாலை தீர:
  • உத்தாமணி இலையை வேப்பென்னையில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம் 

கண்டமாலை புண் தீர:
  • மாவிலங்கபட்டை கஷாயம் காலை மாலை கொடுக்கலாம்

தண்டுவடவலி குணமாக:
  • வாத நாராயணன் இலை 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டு வர குணமாகும் 

முதுகு, தோள்பட்டை, புட்டா வலி: 

  • வாத நாராயணன் இலைகளை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க குணமாகும்

No comments:

Post a Comment