Thursday, March 13, 2014

வயிற்றுப்போக்கு, பேதி, இரத்த பேதி சரியாக சிறப்பு இயற்கை வைத்தியம்


கழிச்சல் குணமாக:
  • மாங்கொட்டை, பருப்பு, மாதுளம்பூ, ஓமம் சேர்த்து பொடி செய்து மோரில் சேர்த்து சாப்பிட குணமாகும்

சுக பேதியாக:
  • நுனாவேறை கஷயாமாக்கி குடிக்கவும்

சீதபேதி குணமாக:
  • புளியங்கொட்டை தோல் மாதுளம்பழ தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட குணமாகும்

பேதி குணமாக:
  • அவரை இலை சாறை திருடன் கலந்து சாப்பிட பேதி உடனடியாக குணமாகும்

தொடர் வாயிற்று போக்கு: பப்பாளி பழம் சாப்பிட குணமாகும்

காலரா குணமாக:
  • மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுக்கவும்

பேதி நிற்க:
  • கொய்யா வேரை கொதிக்க வைத்து காலையில் சாப்பிடலாம்

சீதபேதி அஜீரணம் உள்ளவர்கள்: 
  • அளிவிரைகளை அரைத்து சாப்பிடலாம்

இரத்தபேதி தீர:
  • இலந்தைபட்டை கஷாயம் செய்து குடிக்கலாம்

மலத்துடன் இரத்தம் வருவதை தடுக்க:
  • மாதுளம் பூ இடித்து தேன் கலந்து சாப்பிடலாம்

சீதபேதி குணமாக:
  • நுங்கை தோல் உரிக்காமல் சாப்பிட்டு வரலாம்

மேகம், வயிற்ருபோக்கு தீர:
  • நீர்முள்ளி விதையை பொடி செய்து 1 கிராம் பாலில் கலந்து சாப்பிடலாம்

வயிற்ருபோக்கு குணமாக:
  • மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து உண்ண எல்லா வகை வாயிற்று பிரச்சனைகளும் தீரும்

குமட்டல், வாயிற்று போக்கு தீர:
  • எலுமிச்சை சாரில் சீரகம் ஊற வைத்து காய வைத்து சுவைத்து மென்றிடலாம்

பேதி:
  • வேப்பிலை வசம்பு கஷாயம் குடிக்கலாம்

உஷ்ணபேதி குணமாக:

  • உலர்ந்த மாம்பூ சீரகத்தை சேர்த்து தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும் 

Monday, March 10, 2014

இருதயம் பலம் பெறுவதற்கு சிறந்த சித்த மருத்துவ குறிப்புகள்


இதய படபடப்பு குறைய:
  • மாசிக்காயை பால்விட்டு உரசி காலை மாலை இரு வேலை அரைகிராம் நாவில் சுவைக்கலாம் (எச்சரிக்கை அதிகமானால் மயக்கம் வரும்)

இதயம் படபடப்பு நீங்க:
  • தினசரி ஒரு பேரிக்கையை சாப்பிட இதய படபடப்பை குறைக்கலாம்

இதய நோய் சாந்தமாக:
  • துளசி இலை சாறு, தேன் வெந்நீரில் கலந்து 48 நாள் சாப்பிட்டு வரவும்

இதயத்தில் குத்தும் வலி குணமாக:
  • கருந்துளசி இலை செம்பருத்தி பூ கசாயம் பத்து நாட்கள் சாப்பிடலாம்

இதயம் பலம் பெற :
  • தினசரி ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வரலாம்

இருதயம் வலுவாக
  • அத்தி பழத்தை காய வைத்து பொடியாக்கி ஒரு கரண்டி சாப்பிட்டு வரலாம்

இதய நடுக்கம்
  • திருநீற்று பச்சிலை முகர்வதால் சாந்தமாகும்

இதயத்திற்கு பலம் கிடைக்க:
  • மாதுளை சாருடன் தேன் கலந்து சாப்பிடவும் ஜீரண சத்தியையும் அதிகரிக்கும்

நெஞ்சு வலி:
  • இலந்தை பழம் சாப்பிடலாம்

மார்பு துடிப்பு இதய வலி தீர:
  • சந்தன தூள் கஷயாம் செய்து குடிக்கலாம்

இதய பலவீனம் தீர:
  • செம்பருத்தி பூ உலர்த்தி பொடி மருதம் பட்டை தூள் சம அளவு கலந்து பருகலாம்

மாரடைப்பு:
  • தான்றிக்காய் கொடி இரண்டு சிட்டிகை தேனில் கலந்து நாக்கில் தடவலாம்

நெஞ்சு வலி தீர:
  • இஞ்சி துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்

இதய வலி குணமாக:
  • துளசி விதை 100 கிராம் பன்னீர் 125 கிராம் சர்க்கரை 25 கிராம் நன்றாக கலக்கி இரண்டு வேலை சாப்பிடவும்

இதய நோய் குணமாக:
  • மருதம் பட்டை செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்

மார்பு வலி:
  • இஞ்சி சாறு எலுமிச்சை சாறு தேன் கலந்து சாப்பிட வலி நிற்கும்

சீரற்ற இதய துடிப்பு சரியாக:
  • கருஞ்துளசி இலை மருதம் பட்டை கஷாயம் சாப்பிட்டலாம்


இதய நோய் உள்ளவர்கள் : டீ குடிக்கலாம், காபி தவிர்த்தல் நலம் 

உடம்புக்கு உள்ளே இருக்கும் புண்கள் ஆற

உள்ரணம் தீர:
  • கொட்டை கரந்தை உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வரலாம்

உள்ரணம் குணமாக:
  • கொத்தமல்லி உணவில் அடிக்கடி பயன்படுத்த வர விரைவில் குணமாகும் 

அக உறுப்புகள் சீராக: 
  • சீரக நீரை குடிநீராக பயன்படுத்த வேண்டும்

அக உறுப்புகள் பலமடைய:
  • கிராம்பு பொடியை அரைகிராம் தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வரலாம்

உள்ரணம்:
  • தென்னம் பூவை மென்று தின்று வரவும்

உள் உறுப்புகளை வன்ன்மைபடுத்த :
  • கொன்றை பூ பொடி செய்து சாப்பிட்டு வர உள்ளுறுப்புகளை வன்ன்மைபடுத்தலாம்

கழுத்து வலி குணமாக:
  • அமுக்கிராங் கிழங்கை தெளிந்த சுண்ணாம்பு நீரில் குழைத்து கொதிக்க வைத்து கழுத்தில் பற்று போடலாம்

சன்னி பிடரி வலி, வாத நோய் கட்டுப்பட:
  • வேப்பன்னையில் தலைமுழுகி வர குணமாகும்

பொன்னுக்கு வீங்கி குணமாக:
  • கன்னம், கழுத்தில் ஏற்படும் வீக்க நோய் வசம்பு பலா மஞ்சள் சேர்த்து அரைத்து போடவும்

கண்டமாலை வீக்கம் கரைய:
  • கொள்ளுக்காய் வேளை செடி வேர், மஞ்சள் சேர்த்து பாலில் அரைத்து பூசி வரவும்

நரம் இசிவு சிரங்கு, கண்டமாலை தீர:
  • உத்தாமணி இலையை வேப்பென்னையில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம் 

கண்டமாலை புண் தீர:
  • மாவிலங்கபட்டை கஷாயம் காலை மாலை கொடுக்கலாம்

தண்டுவடவலி குணமாக:
  • வாத நாராயணன் இலை 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டு வர குணமாகும் 

முதுகு, தோள்பட்டை, புட்டா வலி: 

  • வாத நாராயணன் இலைகளை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க குணமாகும்

ஆறாத புண்கள் எளிதில் ஆறுவதற்கு :

ஆறாத புண்கள் ஆற:
  • சானா கீரை சாப்பிடலாம்

மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற:
  • விராலி இலையை நரம்புகள் நீக்கிவிட்டு வதக்கி வீக்கத்தின் மீது வேப்பெண்ணை தடவி கட்டலாம்

சிராய்ப்பு புண்: 
  • நம் எச்சிலுக்கு கூட மருத்துவம் உண்டு

சதை வளரும் புண்: 
  • ஊமத்தை சாறு சம அளவு தேங்காய் எண்ணெய் மயில் துத்தம் சிறிது காய்ச்சி பூசலாம்


எல்லா வித புண் புரைகளும் ஆற
  • உதிரமர இலையை அரைத்து பற்றிடலாம் 

Saturday, March 8, 2014

அடிபட்ட காயம் எளிதில் குணமடைய

சிராய்ப்பு காயங்களுக்கு:
  • இவலம் பிசினை பொடி செய்து காயங்கள் மீது தடவி வர குணமாகும்

எல்லா வித புரை புண்களும் தீர:
  • உதிரமா இலையை அரைத்து பற்றிடலாம்

வெட்டுக்காயம் குணமாக:
  • இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயங்கள் மீது பூசலாம்

வெட்டுக்காயம் சீக்கிரம் ஆற:
  • புங்கன் இலையை அரைத்து வெட்டுக்காயங்கள் மீது பூசி வரலாம்

அடிபட்ட காயம் சீழ் பிடிக்காமல் ஆற:
  • மிளகாய் வத்தல் அரைத்து கட்டவும்

காயம் குணமாக:
  • அரிவாள்மனை பூண்டு இலை, குப்பை மேனி இலை, பூண்டு, மிளகு சேர்த்து அரைத்து கட்டவும்

வெட்டுக்காய புண் செப்டிக் ஆகாமல் தடுக்க:
  • குப்பை மேனி இலையை அரைத்து பூச செப்டிக் ஆவதை தடுக்கலாம்

ரணங்கள் ஆற:
  • பெருங்காயத்துடன் வேப்பிலையை மைய அரைத்து காயத்தின் மீது தடவி வர ரணங்கள் குணமாகும்

சாதாரண புண்கள், காயங்களுக்கு:
  • கடுக்காய் பொடி சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து போடலாம்

நாள்பட்ட புண் ஆற:
  • புளிய மரத்தின் சொற சொறத்த பட்டையை பொடி செய்து பாலுடன் கலந்து தடவி வர புண் ஆறும்

புரையோடியபுண் காயங்கள் ஆற: அத்தி பால் தடவலாம்


புண்: 
  • சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கால்களில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் உடனடியாக கவனிக்க வேண்டும் 

Friday, March 7, 2014

காய்ச்சல் குணமாக

காய்ச்சல் தீர:- 
  • வேப்பிலையை வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கவும். நிம்மதியான தூக்கமும் வரும்

மலேரியா காய்ச்சல் குணமாக: 
  • மிளகு சீரகம் சேர்த்து சாப்பிட்டு வரவும்

பித்த காய்ச்சல் தீர: 
  • சீதேவி செங்கழுநீர் சமூலமாக்குடிநீர் செய்து சாப்பிடலாம்

எப்படிப்பட்ட காய்ச்சலும் தீர: 
  • கோரைக்கிழங்கு கஷாயம் செய்து குடித்தால் நல்லது

எலும்பு காய்ச்சல் தீர: 
  • நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை மாலை சாப்பிட்டு வரவும் 

காய்ச்சல் சரியாக: 
  • நார்த்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்கவும்

சுரம் நீங்க: 
  • வெங்காய சாறு அரை கப் காலை மாலை சாப்பிட்டு வரவும்

அம்மை காய்ச்சல் தீர: 
  • அகத்தி மரப்பட்டை கஷாயம் குடிக்க அம்மை காய்ச்சல் தீரும்

சளி காய்ச்சல் தீர: 
  • ஓமவல்லி இல்லை காம்பு கஷாயம் செய்து குடித்து வரவும்

சளி காய்ச்சல் குணமாக: 
  • ஆடாதோடா இல்லை கஷாயம் தேன் கலந்து குடிக்க சரியாகும்

தாகசுரம் நீங்க: 
  • கோரை கிழங்கு, சந்தனம்,வெட்டி வேர், பற்படாகம், பிரமட்டை கஷாயம் குடிக்கலாம்

சன்னி இழுப்பு: 
  • சங்கிலி வேப்பிலை சமாளவு கஷாயம் தேன் கலந்து குடிக்க சரியாகும்

வாத காய்ச்சல் குணமாக: 
  • அவரி இலை சீரகம் மிளகு, சேர்த்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்கவும்

இருமல் சளி காய்ச்சல் தீர:  
  • ஓமவல்லி இல்லை காம்பு கசாயம் செய்து குடிக்கலாம்

இடைவிடாத காய்ச்சல் தீர: 
  • பீச்சங்கு இலை சாறு 10 மிலி சாப்பிட்டு வரலாம்

தாகம் மிகுந்த சுரம் தீர: 
  • கனவாழை சமூலதுடன் மிளகு சீரகம் கஷாயம் செய்து குடிக்கலாம்

சீதள காய்ச்சல் குணமாக: 
  • தூதுவளை,கண்டாத்ரி பற்படாகம் விஷ்ணுகிரந்தி கஷாயம் காய்ச்சி 10 மிலி மூன்று வேலை குடிக்கலாம்

நச்சு காய்ச்சல் போக: 
  • பற்படாகம் நிலவேம்பு சுக்கு சீரகம் அதிமதுரம் கஷாயம் குடிக்கலாம்

டைபாய்டு தீர: 
  • புன்னை பூவை உலர்த்தி பொடி ஒரு சிட்டிகை காலை மாலை கொடுக்கலாம்

குளிர் காய்ச்சல் தீர: 
  • முருங்கைபட்டை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி கொடுக்கலாம்


பித்த சுரம் தீர: 
  • விமாள இலை கஷாயம் குடிக்கலாம்   

சரும நோய் குணமாக

அக்கூல் பகுதி:-  
  • தினமும் குறைந்தது இரு முறையாவது தண்ணீர் விட்டு நன்கு கழுவி ஈரம் இல்லாத துணியை கொண்டு துடைக்க வேண்டும்

சீலைபேன் ஒழிய:- 
  • நாய் துளசி இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம்

படர் தாமரை தீர:- 
  • சந்தனக்கட்டையை எலுமிச்சை சாற்றில் அரைத்து தடவ வேண்டும்

படர் தாமரை குணமாக: 
  • பூவரசு காயின் சாற்றை தடவவும்.

நமைச்சல் சிரங்கு தீர:- 
  • துளசி இலையை அரைத்து பூசி குளிக்க வேண்டும்

தேமல் சரியாக:- 
  • கமலா ஆரஞ்சு தொலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளிக்க வேண்டும்

சரும நோய்:- 
  • மஞ்சள் வேப்பில்லை அரைத்து பூச குணமாகும்

தேமல் படை குணமாக:- 
  • நாயுருவி இலை சாரை தடவி வர குணமாகும்

செரியாமை, தோல் நோய்கள் தீர:-  
  • நனாரி வேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம்

உடல் நாற்றம் நீங்க:-  
  • பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளிக்கலாம்

தோள்வலி நீங்க:- 
  • மாதுளம், அன்னாச்சி, திராட்சை, எலுமிச்சை நெல்லிக்காய் சாப்பிடலாம்

தேமல் குணமாக:- 
  • வெள்ளை பூடை, வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தோலில் தேய்த்து குளிக்கலாம்.

சொறி சிரங்கு குணமாக:-  
  • அருகம்புல் தையலம் தேய்த்து குளிக்கலாம்

வேர் குரு:- 
  • சாதம் வடித்த கஞ்சியை தடவி கொஞ்சம் நேரம் கழித்து குளிக்கலாம்

புண் சிரங்கு தீர:- 
  • நுனா இலையை அரைத்து பற்று போட புண் சிரங்கு தீரும்

கரும்படை:-  
  • ஜாதிக்காய் அரைத்து தடவலாம்

சிரட்டை தைலம்:- 
  • தோல் வியாதிக்கு அருமையான மருந்து

உடல் வீக்கம் தோல் நோய் குணமாக:- 
  • தக்காளிக்காய் சாப்பிடலாம்

சொறி சிரங்கு படை தீர:- 
  • நிலாவரை கஷாயம் தடவி வர ஆறும்


கரப்பான் கிரந்தி குணமாக:- 
  • ஆடாதொடை இலை, சங்கன் இலை கஷாயம் செய்து சாப்பிடலாம்