உடல் முகம் அழகு பெற
- மேனி பொன்னிறமாக:- மஞ்சள்கரிசலாங்கண்ணி பொடி 5 கிராம் அளவு ஒரு வருடம் தொடர்ந்து
சாப்பிட்டு வரலாம்
- தேகம் பொன்னிறமாக:- ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிட்டு வரவும்
- முகம் பளபளக்க:- நாட்டு வாழைப்பழம் நன்றாக பழுத்தது ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து
முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்
- முக சுருக்கம் மறைய:- முட்டை கோஸ் சாரை முகத்தில் தடவி வரலாம்
- உடல் மினுமினுப்பாக:- இரவில் படுக்க போகும் முன் தேன், குங்குமப்பூ,
மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.
- உடல் நிறம் பளபளக்க:- அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி
தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வரலாம்
- உடல் வனப்பு உண்டாக:- முருங்கை பிசின் பொடி செய்து அரை சிட்டிகை
பாலில் கலந்து பருகி வரவும்
- முகம் வசீகரம் பெற:- சந்தன கட்டை எலுமிச்சை சாரில் கலந்து பூச
முக வசீகரம் பெரும்
- முகம் பிரகாசம் அடைய:- கனவாழை மாவிலை சம அளவு எடுத்து காய்ச்சி
வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவவும்
- மேனி பளபளப்பு பெற:- ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வரலாம்.
- தோல் வழவழப்பாக:- மருதாணி இலையை அரைத்து கருப்பு தோல் மீது தேய்த்து வந்தால் கருப்பு
மாறும்
- உடல் சிவப்பாக மாற:- வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து
அரைத்து உடலில் பூசி வரவும்
- உடல் பொலிவு பெற:- கோரை கிழங்கு பொடி தேனில் கலந்து சாப்பிட்டு வர உடம்பு பொலிவு
உண்டாகும்
- முகம் அழகு கூட:- அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகி
வர உடலழகும் முக அழகும் கூடும்
No comments:
Post a Comment