Sunday, December 15, 2013
Thursday, December 12, 2013
பெண்கள் இடுப்பு வலி சரியாக சிறிய குறிப்புகள்
- இடுப்பு வலி குணமாக:- வெள்ளைப்பூண்டு கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வரலாம்
- பெண்கள் இடுப்பின் புண்கள் குணமாக:- கடுக்காயை கல்லில் உரசி தடவி வந்தால் குணமாகும்
- விலாவளி தீர:- துளசி இலை இஞ்சி தாமரை வேர் அரைத்து கொதிக்க வைத்து பற்றிட விலாவளி தீரும்
- இடுப்பு வலி தீர:- விழுதி இலை சாறு நல்லெண்ணெய் கலந்து 5 மிலி 3 நாட்கள் சாப்பிட இடுப்பு வலி தீரும்
பெண்கள் பெரும்பாடு – உதிரசிக்கல்
- மாதவிடாய் ஒழுங்காக:- புதினா இலையில் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்
- மாதவிடாய் வயிற்றுவலி தீர:- அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்
- பெரும்பாடு தீர:- ஆவாரம்பட்டையை பொடியாக்கி கசாயம் செய்து சாப்பிட்டு வரவும்
- உதிர சிக்கல் தீர:- ஈஸ்வரமூலி அரைத்து காய்ச்சி குடிக்கவும்.
- மாதவிலக்கு தாரளமாக:- இலந்தை பூ, வெற்றிலை, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடலாம்
- வெள்ளை தீர:- அவுரி வேர், பெருநாஞ்சில் இலை சேர்த்து மோரில் கலந்து குடிக்கவும்
- வெள்ளைப்போக்கு நிற்க:- கானவாளை சமூலம், கீழா நெல்லி இலையுடன் சேர்த்து தயிரில் குடிக்கலாம்
- வெள்ளைபடுதல் குணமாக:- தினமும் அன்னாசிப்பழம் சாப்பிடவும்
- உடற்சோர்வு நீங்கி பலம் பெற:- கோதுமை கஞ்சி மாதவிடாய் காலங்களில் சாப்பிடவும்
- மாதவிடாய் வாயிற்று வலி தீர:- அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்.
இன்பம் கிடைப்பதற்கு
- காமப்பெருக்கி:- அத்திபழம் சாப்பிட காமபெருக்கியாக செயல்படும்
- இல்லற வாழ்க்கையில் திருப்தியில்லாமல் இருந்தால்:- ஆலமரத்தின் கொழுந்து இலைகளை அரைத்து 5 கிராம் அளவு சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வரவும்
- காமம் பெருக்க:- முள்ளங்கி விதைப்பொடி செய்து சாப்பிடலாம்.
- உடலுறவில் நிறைவான இன்பம் கிடைக்க:- பாலும் தேனும் கலந்து சாப்பிடவும்
Wednesday, December 11, 2013
பெண்கள் கருப்பை- சுகபிரசவம்
- கருப்பை பலமடைய:- சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் சம அளவு அரைத்து பனவெல்லம் சேர்த்து 5 கிராம் காலை மாலை சாப்பிட்டு வர வேண்டும்
- கருவுற்ற தாய்மார்கள்:- கருவுற்ற தாய்மார்கள் சாப்பிட சிறந்த பழம் மாம்பழம்
- சுகபிரசவம் ஆக:- ஆப்பிள், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் அரைத்து இரண்டு கிராம் அளவு சாப்பிடலாம்
- கர்பாயாச கோளாறு நீங்க:- சிறுகுறிஞ்சா இலை, களா இலை அரைத்து வெறும் வயிற்றில் குடிக்கவும்
- கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்க:- அசோகப்பட்டை, மாதுளை வேர், மாதுளை தூள் பொடி செய்து மூன்று சிட்டிகை மூன்று வேலை சாப்பிடவும்
- குழந்தையின்மை நீங்க :- பெண்கள் வேப்பம்பூவுடன் மிளகு சேர்த்து பௌடராக்கி சாப்பிட்டு வரலாம்.
- கருப்பை குறைபாடுகள் நீங்க:- பருத்தி இலை சாறை தேனுடன் கலந்து சாப்பிடலாம்
- கர்பப்பை புழு நீங்க:- மாதவிடாய் முதல் மூன்று நாட்கள் வெள்ளருகு சமூலத்தை அரைத்து இரண்டு கிராம் சாப்பிடலாம்
- குழந்தை சிவப்பாக பிறக்க:- கர்ப்பிணி பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிடலாம்.
- பிள்ளை பேரு உண்டாக:- மாதுளை வேர்ப்பட்டை, விதை பொடி மூன்று கிராம் 3 கிராம் காலை மாலை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வரவும்.
- கர்ப்பப்பை நோய்கள் தீர:- கொடி வேலி வேர்ப்பட்டை அரைத்து பாலில் சேர்த்து காலை மாலை இரண்டு வேலை 21 நாட்கள் சாப்பிடலாம்
- பெரும்பாடு தீர, கர்பப்பை பலப்பட:- வெட்சிபூவை அரைத்து அருகம்புல் சாறு கலந்து குடிக்க தீரும் கர்பப்பை பலப்படும்.
குழந்தைகளுக்கான சிறப்பு ஆலோசனைகள்
- குழந்தைகளுக்கு:- 6லிருந்து 12 மாதம் வரை தாய்ப்பாலுடன் ஆட்டுப்பால் பழச்சாறு, பசும் பால் கொடுக்க வேண்டும்
- போலியோ சொட்டு மருந்து:- தயாரித்த இடத்திலிருந்து குழந்தை வாயில் விடும் வரை எட்டு டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நிலையில் இருந்தால் மட்டுமே பையன் தரும்.
- குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகாமல் இருக்க:-குழந்தைகளை ஒப்பிடுவதை தவிர்த்தாலே போதும்
- குறைமாத குழந்தை:- குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளை வாழை மட்டையில் வைத்து வளர்க்க வேண்டும்
- பசும்பாலை விட சக்தி வாய்ந்தது:- குழந்தைகளுக்கு தேங்காயை சிறு சிறு கீட்ருகளாக நறுக்கி கடித்து சாப்பிட கொடுக்கலாம்
- அக்கி குணமாக:- ஆழம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெய் குழைத்து தடவி வரவும்
- வயிறு பெருத்து உடல் சிறியதாக உள்ள குழந்தைகளுக்கு:- கோரை கிழங்கு தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்கவும்
- எழும்பும் தோலுமான குழந்தைகளுக்கு நல்வளர்ச்சி உண்டாக:- பூசணிக்காய் துருவி பிழிந்து பிட்டவியலாக்கு சர்க்கரையுடன் கலந்து கொடுக்கலாம்.
- குழந்தைகளுக்கு தொடர் இருமலை தடுக்க:- சிறிது பெரும் வெங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர இருமல் நிற்கும்
- வாயிற்று புண் ஆற:- குழந்தைகளுக்கு அம்மன் பச்சரிசி, சுண்டைக்காய் அளவு கொடுத்து வரவும்.
- குழந்தைகளுக்கான ஜீரண டானிக்:- சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுக்கலாம்.
- காய்ச்சல் குணமாக:- நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்தில் பொடி சிதைத்து கசாயம் செய்து 10 மி.லி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
- கக்குவான் இருமல் தீர:- துளசி பூங்கொத்து, திப்பிலி வசம்பு பொடி, சர்க்கரை கலந்து ஒரு சிட்டிகை பொடி தேனில் கலந்து கொடுக்கவும்.
Tuesday, December 10, 2013
உடல் முகம் அழகு பெற
- மேனி பொன்னிறமாக:- மஞ்சள்கரிசலாங்கண்ணி பொடி 5 கிராம் அளவு ஒரு வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்
- தேகம் பொன்னிறமாக:- ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிட்டு வரவும்
- முகம் பளபளக்க:- நாட்டு வாழைப்பழம் நன்றாக பழுத்தது ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்
- முக சுருக்கம் மறைய:- முட்டை கோஸ் சாரை முகத்தில் தடவி வரலாம்
- உடல் மினுமினுப்பாக:- இரவில் படுக்க போகும் முன் தேன், குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.
- உடல் நிறம் பளபளக்க:- அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வரலாம்
- உடல் வனப்பு உண்டாக:- முருங்கை பிசின் பொடி செய்து அரை சிட்டிகை பாலில் கலந்து பருகி வரவும்
- முகம் வசீகரம் பெற:- சந்தன கட்டை எலுமிச்சை சாரில் கலந்து பூச முக வசீகரம் பெரும்
- முகம் பிரகாசம் அடைய:- கனவாழை மாவிலை சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவவும்
- மேனி பளபளப்பு பெற:- ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வரலாம்.
- தோல் வழவழப்பாக:- மருதாணி இலையை அரைத்து கருப்பு தோல் மீது தேய்த்து வந்தால் கருப்பு மாறும்
- உடல் சிவப்பாக மாற:- வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி வரவும்
- உடல் பொலிவு பெற:- கோரை கிழங்கு பொடி தேனில் கலந்து சாப்பிட்டு வர உடம்பு பொலிவு உண்டாகும்
- முகம் அழகு கூட:- அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகி வர உடலழகும் முக அழகும் கூடும்
சிறந்த ஆரோக்கியம் பெற சின்ன டிப்ஸ்
குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்க:- தினசரி
இரண்டு பேரிட்சை பழங்களை சாப்பிட்டு வரவும்
ஆயுள் பெருக:- இஞ்சி துண்டு தேனில் ஊற வைத்து 48 நாள்
சாப்பிட பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்
நிறைவான ஆரோக்கியம் பெற:- உடல் உறுப்புகளை முழுமையாக கட்டுப்பாட்டில்
வைக்கும் தர்ம ஆசனா செய்வதன் மூலம் நிறைவான ஆரோக்கியம் பெறலாம்
Monday, December 9, 2013
சளி இருமல் ஆஸ்துமா குணமாக
- கபம் உடைந்து வெளியே வர: கலவை கீரையை இரண்டு வாரம் உண்டு வரலாம்.
- எலும்புருக்கி நோய் குணமாக: புறால் இலையை பொடித்து அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட எளிதில் குணமாகிவிடும்
- கபரோகம் தீர:- சங்கிலை தூதுவளை இலை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வரவும்
- கிராணி, குன்மம், கபநோய்கள் தீர:- அழிஞ்சல் இலையை அரைத்து 1 கிராம் காலை மாலை கொடுக்கலாம்
- கபம் குணமாக:- கருந்துளசி இல்லை சாறு பிழிந்து இரண்டு வேலை மூன்று நாட்கள் சாப்பிட்டு வரவும்
- கபம் நீங்க:- சுண்டைக்காய் சமைத்து உண்ண வேண்டும்.
- கபம் வெளியாக: சிறுகுறிஞ்சா வேர் போடி வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்
- சகல பிணி, சகோரமும் தீர:- விழுதி இலை சாறு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலை முழுகலாம்.
- ஜலதோஷம் நீங்க:- துளசி ரசம், இஞ்சி ரசம் பருகலாம்.
- ஆஸ்துமா தீர:- நொச்சி இல்லை, மிளகு, லவங்கம், பூண்டு மென்று விழுங்கலாம்
- சளி தீர:- நத்தை சூரி இலை சாறை 15 மி.லி காலை மாலை சாப்பிடலாம்
- சளியை அகற்ற:- துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்கலாம்
- மார்பு சளியை நீங்க:- பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை துவையல் சுடுசோறு நெய்யில் உண்ணலாம்.
- சளி சுரம் நீங்க:- முசுமுசுக்கு இலை தோசை மாவுடன் அரைத்து தோசை சாப்பிடலாம்.
- இருமல் நிற்க:- ஆடாதோடா இலை சாறு தேன் கலந்து சாப்பிடலாம்
- காசம் :- ஆடாதொடா இலை கஷாயம் செய்து தேன் கலந்து பருகலாம்
- இளைப்பு, இருமல், குமமாக:- விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
- காசம் இறைப்பு நீங்க:- கரிசலாங்கண்ணி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடலாம்.
- இருமல் குணமாக:- வெந்தையக்கீரை சமைத்து சாப்பிட்டு வரலாம்.
- வரட்டு இருமல் குணமாக :- மிளகுடன் பொரிக்கடலை சேர்த்து பொடியாக்கி ஒரு சிட்டிகை என மூன்று வேலை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்
- சளி தேக்கம் நீங்க:- வல்லாரை பொடி தூதுவளை பொடி பாலில் கலந்து குடிக்கவும்.
- காச நோய்:- தினமும் அரிவேல்லிக்காய் சாப்பிடவும்.
- நெஞ்சு சளி குணமாக:- தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவலாம்.
- காச நோய் தீர:- பசுந்தயிர் உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும்
- இருமல் குணமாக:- முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து பருகவும்
- மார்பு சளி:- இஞ்சி சீனி சேர்த்து செய்த இஞ்சி முரப்பாய் மிட்டாயை சாப்பிடவும்
- ஆஸ்துமா, மார்பு சளி தீர:- சுண்டைக்காய் உப்பு நீரில் ஊற வைத்து காய வைத்து பருகலாம்.
Subscribe to:
Posts (Atom)